June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

ஜனாதிபதி மாளிகை முகலாய தோட்டம் நாளை திறப்பு;ஆன்லைன் முன்பதிவுகளுக்கு மட்டுமே அனுமதி

1 min read

Presidential Palace Mughal Garden Opening Tomorrow- Online bookings only

11.2.2022
டெல்லி,ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டம் நாளை முதல் திறக்கப்படுவதாக ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது. ஆனால் ஆன்லைனின் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

ஜனாதிபதி மாளிகை

ஜனாதிபதி மாளிகையின் வருடாந்திர தோட்டத்திருவிழாவையொட்டி அங்குள்ள வரலாற்று புகழ் பெற்ற முகலாய தோட்டத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

வண்ண வண்ண விதவிதமான மலர்கள் நிறைந்த இந்த தோட்டத்தில் இந்த ஆண்டு புதிதாக 11 வகையான துலிப் மலர்கள் பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காற்றைத் தூய்மைப்படுத்தக் கூடிய தாவரங்களும் இந்தத் தோட்டத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.வருடந்தோறும் இந்த மலர் தோட்டத்தை பொது மக்களும் பார்வையிட அனுமதிக்கப்படுகிறது.

இந்த மாதம் 12 ஆம் தேதி (நாளை) முதல் மார்ச் 16ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொது மக்கள் இந்த தோட்டத்தை பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தோட்டப் பராமரிப்பு பணிகளுக்காக திங்கட்கிழமைகள் மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.

ஆன்லைனில் முன்பதிவு செய்த பார்வையாளர்கள் மட்டும் அனுமதிக்கப் படுவார்கள். இதற்கான முன்பதிவு https://rashtrapatisachivalaya.gov.in or https://rb.nic.in/rbvisit/visit_plan.aspx. என்ற இணையதளங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக இந்த ஆண்டும், நேரடி நுழைவு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி மாளிகை செயலகம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *