June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

டிரோன் பைலட் உரிமம் இனி தேவை இல்லை

1 min read

Drone pilot license is no longer required

13.2.2022
நாட்டில் ஆளில்லா விமானங்களை இயக்க டிரோன் பைலட் உரிமம் தேவை என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெள்ளிக்கிழமை கூறியுள்ளது.

இந்தியாவில் ஆளில்லா விமானங்களை இயக்க டிரோன் பைலட் உரிமம் தேவை என்பதை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெள்ளிக்கிழமை ரத்து செய்துள்ளது.

இந்தியாவில் ட்ரோனை இயக்குவதற்கு டிஜிசிஏ-அங்கீகரிக்கப்பட்ட டிரோன் பள்ளியால் வழங்கப்படும் ரிமோட் பைலட் சான்றிதழ் (RPC) போதுமானதாக இருக்கும் என்றும் வணிக நோக்கங்களுக்காக 2 கிலோ எடையுள்ள ஆளில்லா விமானத்தை இயக்க ரிமோட் பைலட் சான்றிதழ் தேவையில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

நாட்டில் டிரோன்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக சில விதிவிலக்குகளுடன் டிரோன்களை இறக்குமதி செய்வதை அரசாங்கம் தடை செய்த சில நாட்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை வந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *