June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கட்சி கட்டுப்பாட்டை மீறி போட்டியிட்ட 59 பேர் திமுகவில் இருந்து நீக்கம்

1 min read

Urban local body elections: 59 people expelled from DMK for contesting outside party control

14/2/2022
கட்சி கட்டுப்பாட்டை மீறி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 59 பேர் திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீக்கம்

தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடம் கிடைக்காத அரசியல் கட்சியினர் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கி உள்ளனர். அந்த வகையில் தி.மு.க.வை சேர்ந்த 59 நிர்வாகிகள் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர். இந்தநிலையில் அவர்கள் தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை வடகிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் கிழக்கு பகுதி 7-வது வட்ட செயலாளர் பி. ஆதிகுருசாமி, மாதவரம் வடக்கு பகுதி 23-வது வட்டத்தை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் என்.மேனகா நித்யானந்தம், 23-வது வட்ட செயலாளர் என்.சரவணன், திருவொற்றியூர் மேற்கு பகுதி 2-வது வட்டத்தை சேர்ந்த மாவட்ட பிரதிநிதி சந்தோஷ்குமார், மாதவரம் தெற்கு பகுதி 25-வது வட்ட பிரதிநிதி பி.லோகநாதன், செங்குன்றம் பேரூர்க் கழகம் 3-வது வார்டை சேர்ந்த இலக்கிய அணி அமைப்பாளர் கே.ராஜேந்திரன், 8-வது வார்டு துணை செயலாளர் எஸ்.முனிகிருஷ்ணபாபு, 14-வது வார்டு மாவட்ட கலை, இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் க.கு.இலக்கியன், சென்னை தெற்கு மாவட்டம் மதுரவாயல் வடக்கு பகுதி 92-வது வட்டத்தை சேர்ந்த கே.நீலகண்டன், 144-வது வட்டத்தை சேர்ந்த பகுதி துணை செயலாளர் எம்.எம்.சீதாபதி, 147-வது வட்டத்தை சேர்ந்த பகுதி பிரதிநிதி ப.ரமேஷ்காந்தன், காஞ்சீபுரம் வடக்கு மாவட்டம் ஆலந்தூர் வடக்கு பகுதி 158-வது வட்டத்தை சேர்ந்த மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் பெருமாள், மாவட்ட மகளிரணி தொண்டரணி அமைப்பாளர் கிரிஜா பெருமாள், தாம்பரம் நகரம் 50-வது வார்டை சேர்ந்த மாவட்ட பிரதிநிதி இரா.செல்வகுமார், செம்பாக்கம் நகரம் 1-வது வார்டு செயலாளர் ஜெயபிரதீப் சந்திரன் ஆகியோர் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மற்ற மாவட்டங்கள்

மற்ற மாவட்டங்களில் நீக்கம் செய்யப்பட்ட நிர்வாகிகள்:-

விழுப்புரம் மத்திய மாவட்டம் விழுப்புரம் நக்ரம் 28-வது வார்டு செயலாளர் வடிவேல் பழனி, விக்கிரவாண்டி பேரூர் 9-வது வார்டை சேர்ந்த பேரூர் துணை செயலாளர் சு.வீரவேல், 6-வது வார்டை சேர்ந்த பொருளாளர் ஜி.சேகர், திருப்பூர் மத்திய மாவட்டம் திருப்பூர் வடக்கு மாநகர பொறுப்புக்குழு உறுப்பினர் விவிஜி. காந்தி மற்றும் வேலம்மாள், திருப்பூர் தெற்கு மாநகர பொறுப்புக்குழு உறுப்பினர் க.ரவி, திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி அண்ணா காலனி பகுதி பிரதிநிதி சிதம்பரம் மற்றும் கீதா.

தர்மபுரி மேற்கு மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் பாப்பாரப்பட்டி பேரூர் துணை செயலாளர் ஹாஜீராபி தவுலத்பாஷா மற்றும் தவுலத் பாஷா, பாலக்கோடு வடக்கு ஒன்றியம் மாரண்ட அள்ளி பேரூரை சேர்ந்த மாவட்ட பிரதிநிதி எம்.ஆர்.கார்த்திகேயன், தஞ்சை மத்திய மாவட்டம் தஞ்சை மாநகராட்சி 3-வது வார்டை சேர்ந்த தஞ்சை தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஆர்.சுலைமான், 7-வது வார்டை சேர்ந்த 7-வது வட்ட பிரதிநிதி எம்.குளஞ்சியப்பா, 19-வது வார்டை சேர்ந்த 19-வது வட்ட பிரதிநிதி எம்.ராமச்சந்திரன், 21-வது வார்டை சேர்ந்த நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் கே.ராணி, 32-வது வார்டை சேர்ந்த நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் டி.சி.எஸ்.செல்வகுமார், 34-வது வார்டை சேர்ந்த 44-வது வட்ட பிரதிநிதி எஸ்.செந்தில், 36-வது வார்டை சேர்ந்த 43-வது வட்ட செயலாளர் பெ.செல்வம் மற்றும் வெண்ணிலா, 42-வது வார்டை சேர்ந்த 41-வது வட்ட பிரதிநிதி வி.செந்தில்குமார் மற்றும் தேவகி, 43-வது வார்டை சேர்ந்த கேபிள் முருகன் மற்றும் சரிதா முருகன், 44-வது வார்டை சேர்ந்த ஜாபர் மற்றும் மும்தாஜ்பேகம், வல்லம் பேரூராட்சியை சேர்ந்த 3-வது வார்டு சிவக்குமார் மற்றும் கீதா சிவக்குமார், 11-வது வார்டை சேர்ந்த இருதயராஜ், ஈவ்லின் ஜூலியட் இருதயராஜ், 14-வது வார்டை சேர்ந்த கலாதேவி, ஒரத்தநாடு பேரூராட்சியை சேர்ந்த 1-வது வார்டு குணசேகர், மழலைச்செல்வி குணசேகர், திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியை சேர்ந்த 8-வது வார்டு செயலாளர் த.திருஞானசம்பந்தம், 8-வது வார்டு பொருளாளர் பி.காளிமுத்து, மேலத்திருபூந்துருத்தி பேரூராட்சியை சேர்ந்த 4-வது வார்டு நெசவாளர் அணி க.முரளி, திருவையாறு பேரூராட்சியை சேர்ந்த 14-வது வார்டு இளைஞரணி துணை அமைப்பாளர் திபேஷ்பிரபா,

சேலம் மத்திய மாவட்டம் சேலம் மாநகர துணை செயலாளர் லலிதா சுந்தரராஜன், 7-வது வட்ட முன்னாள் செயலாளர் சுந்தரராஜன், 9-வது வட்ட முன்னாள் செயலாளர் சி.மோகன்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *