இந்தியாவில் மேலும் 27,409 பேருக்கு கொரோனா; 347 பேர் சாவு
1 min read
Corona for another 27,409 in India; 347 deaths
15/2/2022
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று மேலும் குறைந்துள்ளது. ஒரு நாளில் 27,409 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 347 பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-
இந்தியாவில் கடந்த இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 27 ஆயிரத்து 409 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 34 ஆயிரத்து 113 மற்றும் ஞாயிற்றுக்கிழமை பாதிப்பான 44 ஆயிரத்து 877- ஐ விட குறைவாகும்.
இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 92 ஆயிரத்து 943 ஆக அதிகரித்துள்ளது.
இன்றுகாலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 82 ஆயிரத்து 817 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 17 லட்சத்து 60 ஆயிரத்து 458 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 127 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தாக்குதலுக்கு ஒரே நாளில் 347 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 9 ஆயிரத்து 358 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 173 கோடியே 42 லட்சத்து 62 ஆயிரத்து 440 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. மேற்கண்ட தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.