இந்தியாவில் புதிதாக 16,051 பேருக்கு கொரோனா; 206 பேர் சாவு
1 min read
Corona for 16,051 newcomers in India; 206 deaths
21/2/2022
இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 16,051 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 206 பேர் இறந்தனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 19, 968 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,051 ஆயிரமாக குறைந்தது.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 28 லட்சத்து 38 ஆயிரத்து 524 ஆக உயர்ந்தது.கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 2 லட்சத்து 2 ஆயிரத்து 131 ஆக குறைந்தது.
நேற்று ஒரு நாளில் கொரோனா தொற்றில் இருந்து 37 ஆயிரத்து 901 பேர் குணம் அடைந்துள்ளனர்.இதுவரையில் இந்த தொற்றில் இருந்து குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 21 லட்சத்து 24 ஆயிரத்து 284 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் ஏற்படுகிற உயிரிழப்பு தொடர்ந்து சரிகிறது. நேற்று 325 பேர் இந்த தொற்றால் உயிரிழந்த நிலையில், இன்று இந்த எண்ணிக்கை 206 ஆக குறைந்தது. இதுவரை இந்த தொற்றால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 12 ஆயிரத்து 109 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் மொத்தம் இதுவரை 1,75,46,25,710 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 7 லட்சத்து 706 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 8 லட்சத்து 31 ஆயிரத்து 81 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது.