June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

வேலூர் மாநகராட்சி தேர்தலில் கல்லூரி மாணவி வெற்றி

1 min read

College student wins Vellore Corporation election

22.2.2022

வேலுார் மாநகராட்சி 28 வது வார்டில், தி.மு.க., வில் போட்டியிட்ட கல்லுாரி மாணவி மம்தாகுமார் வெற்றி பெற்று கவுன்சிலரானார்.வேலுார் மாநகராட்சி 28 வது வார்டில் தி.மு.க., சார்பில் மம்தாகுமார் என்ற கல்லுாரி மாணவி போட்டியிட்டார். இவர் ராணிப்பேட்டை மாவட்டம், கலவை ஆதிபராசக்தி கல்லுாரியில் பி.எஸ்.சி., வேளாண்மை நான்காவது ஆண்டு படித்து வந்தார். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் இளம் வாக்காளர்களை கவர்ந்தனர். இதனால் இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., பா.ஜ., வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு, 3,000 ஓட்டுக்கள் வாங்கி மம்தாகுமார் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற மம்தா குமார் மாடி தோட்டம் அமைக்க முக்கியத்துவம் கொடுக்க உள்ளதாக கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *