ஆட்சி அதிகாரத்தை கையில் எடுக்க உக்ரைன் ராணுவத்துக்கு புதின் திடீர் உத்தரவு
1 min readPutin’s sudden order to the Ukrainian military to seize power
25/2/2022
உக்ரைனில் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுக்கக்கோரி, அந்நாட்டு ராணுவத்திற்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
புதின் உத்தரவு
உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா, உக்ரைனுடன் பேச்சு நடத்த தயார் என அறிவித்தது. அடுத்த சில மணி நேரங்களில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டார்.
“உக்ரைனில் தற்போதுள்ள அரசை அகற்றிவிட்டு, ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றினால், பேச்சு நடத்தி எளிதில் தீர்வு காண முடியும்,” என, புதின் தெரிவித்துள்ளார்.