June 20, 2026

Seithi Saral

Tamil News Channel

ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி

1 min read

25.2.2022
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஜெயக்குமார் கைது

சென்னை தண்டையார்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் கடந்த 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தபோது கள்ள வாக்கு போட முயன்றதாக திமுக தொண்டா் நரேஷ்குமாரை முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமார் மற்றும் அதிமுகவினா் பிடித்தனா்.

மேலும் அவரது சட்டையை கழற்றி அவரை போலீசில் ஒப்படைத்தனா். இதைத்தொடா்ந்து கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் ஜெயக்குமார் மற்றும் அதிமுகவினா் 40 போ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ஜாமீன் மனு தள்ளுபடி

இதனிடையே திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ஜெயக்குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். தற்போது இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை முடிந்த நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், ஜெயக்குமார் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *