தமிழக மாணவர்களிடம் வாட்ஸ் அப் கால் மூலம் மு.க.ஸ்டாலின் பேச்சு
1 min readMK Stalin’s speech to Tamil Nadu students through WhatsApp call
26.2.2022
உக்ரைனில் உள்ள 3 தமிழக மாணவர்களிடம் வாட்ஸ் அப் கால் மூலம் முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார்
மாணவர்கள்
உக்ரைனில் ரஷிய படைகள் மூன்றாவது நாளாக தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகின்றது. இதனால் உக்ரைனில் உள்ள பல இந்திய மாணவர்கள் சொந்த ஊர் திரும்ப கடும் சவால்களை சந்திக்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றிவரும் நிலையில், அங்குள்ள இந்திய மாணவர்கள் ஊர்திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களிடம் வீடியோ கால் மூலம் உரையாடினார். திருச்சியை சேர்ந்த மாணவரிடம் பேசிய ஸ்டாலின் அங்குள்ள சூழ்நிலை குறித்து கேட்டறிந்தார். அவர்களை தைரியமாக இருக்கும்படி கூறிய முதல்வர் , அவர்கள் அனைவரையும் விரைவில் இந்தியா அழைத்து வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.