இந்தியாவில் புதிதாக 6,561 பேருக்கு கொரோனா; 142 பேர் சாவு
1 min read
Corona for 6,561 newcomers in India; 142 deaths
3.3.2022
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 7 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது. ஒரு நாளில் புதிதாக 6,561 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 142 பேர் இறந்துள்ளனர்.
நமது நாட்டில் செவ்வாய்க்கிழமை 6,915 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. புதன் கிழமை இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்தது. நேற்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 7,554 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று புதிதாக 6,561 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் நேற்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6 ஆயிரத்து 561 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,29,45,160 ஆக அதிகரித்துள்ளது.
142 பேர் சாவு
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 142 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,14,388 ஆக உயர்ந்துள்ளது. நேற்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 14,947 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,23,53,620 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 77,152 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,78,02,63,222 பேருக்கு (நேற்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 21,83,976 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று முன்தினம் ஒரே நாளில் 8,82,953 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 77,00,50,005 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.