இலங்கையில் , இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்
1 min read
Jaisankar, Indian Foreign Minister in Sri Lanka
28.3.2022
இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து ஒன்றிய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கையின் நிதித்துறை மந்திரி பசில் ராஜபக்சேவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ஜெய்சங்கர்
ஒன்றிய வெளியுறவுத்துறை மந்திரி எஸ் ஜெய்சங்கர் 5 நாள் பயணமாக மாலத்தீவு மற்றும் இலங்கை சென்றுள்ளார். இருநாட்டு உறவை வலுப்படுத்திடவும் புதிய ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கவும் உள்ளார்.
சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள இந்தியப் பெருங்கடலில் உள்ள இரண்டு முக்கிய அண்டை நாடுகளுடன் இந்தியா தனது உறவுகளை வலுப்படுத்த விரும்புகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த இருநாடுகளுக்குமான பயணம் பார்க்கப்படுகிறது.
அதன்படி, மாலத்தீவு பயணத்தை வெற்றிகரமக முடித்துக்கொண்டு அங்கிருந்து அவர் மூன்று நாள் பயணமாக இலங்கை சென்றடைந்தார்.
வரவேற்பு
அவருக்கு பெரும் வரவேற்பு அளிக்கும் விதமாக, இலங்கையின் 4 முக்கிய மந்திரிகளான இலங்கையின் எரிசக்தி, நெடுஞ்சாலைகள், சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளை வழிநடத்தும் நான்கு இலங்கை மந்திரிகள் அவரை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
அதனை தொடர்ந்து, ஒன்றிய வெளியுறவுத்துறை மந்திரி டாக்டர் எஸ் ஜெய்சங்கர் இலங்கையின் நிதித்துறை மந்திரி பசில் ராஜபக்சேவை சந்தித்தார்.
ஆலோசனை
அந்த சந்திப்பின்போது இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் அதில் இந்தியாவின் ஆதரவான நிலைப்பாடு பற்றி விவாதிக்கப்பட்டது எனவும் அண்டை நாடுகளுடன் இணக்கமான முறையில் இந்தியா செயல்பட்டு வருகிறது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவர் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சியில் (பிம்ஸ்டெக்) பங்கேற்பார்.
மேலும், எதிர்க்கட்சிகள், தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய உறுப்பினர்களுடனும் உரையாடுவார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து, அதிலிருந்து மீள வழி தெரியாமல் திண்டாடி வரும் இலங்கைக்கு, பொருளாதார மீட்பு நடவடிக்கையாக இந்தியாவிலிருந்து தொடர்ந்து உதவி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.