June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 4-ந் தேதி முதல் நேரடி விசாரணை

1 min read

The first direct hearing is coming up on the 4th in the Supreme Court

30.3.2022
வருகிற 4-ம் தேதி முதல் சுப்ரீம் கோர்ட்டில் நேரடி விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவித்துள்ளார்.

காணொலி வாயிலாக…

கொரோனா பாதிப்பு காரணமாக, காணொலி காட்சி வாயிலாகவும், வாரத்தில் இரு நாள்கள் நேரடியாகவும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வரும் வாரத்திலிருந்து முழு அளவில் நேரடி விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்குரைஞர்கள் கோரிக்கை வைத்தால் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காணொலி வாயிலாக விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு முந்தைய நடைமுறைகள், வருகிற 4-ந் தேதி ( திங்கட்கிழமை) முதல் சுப்ரீம் கோர்ட்டில் பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்படடுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *