வேளாண் கல்லூரி மாணவிகள் அனுபவ பயிற்சி
1 min readExperiential training for agricultural college students
31.3.2022
கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமத்திற்குச் சென்று அனுபவ பயிற்சி மேற்கொண்டனர்.
வேளாண் மாணவிகள்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை, வேளாண் ௧ல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் பா.சாருமதி, ஜெ.துர்காதேவி, ப.கீதாலட்சுமி ,ஜோதி யாகன்டி, கு.கீர்த்தனா பிரியா, ரா.மின்னுஷா, ரா.முத்துச்செல்வி, செ.நந்தினி, மா.பிரியதர்ஷினி, அ.சிநேகா மற்றும் ஷ. ஸ்ரீநிதி ஆகிய 11 பேர் கொண்ட குழுவினர் கிராம தங்கள் திட்டத்தின் கீழ் அன்னூரில் தற்போது தங்கி அன்னூர் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள வேளாண் தொழிலகத்தில் அனுபவ பயிற்சி பெற்று வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கனுவாக்கரை கிராமத்தில் சமூக வரைபடம், வள வரைபடம், சிக்கல் மரம், காலக்கோடு, பருவகால காலண்டர், வெண்வரைபடம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இவற்றில் அவ்வூர் மக்களையே ஈடுபடுத்தி அக்கிராம அமைப்பு முறை மற்றும் தற்போதிய நிலையை வரைபடம் மூலமாக அவர்களே அறிந்து கொண்டு தங்கள் கிராமத்திற்கு மேலும் என்னென்ன வசதிகள் தேவை என்பதனையும் புரிந்து கொண்டனர்.