ஓசூர் அருகே மின்சார ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்தது
1 min readAn electric scooter caught fire near Hosur
30.4.2022
ஓசூர் அருகே மின்சார ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்தது.
மின்சார ஸ்கூட்டர்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தனியார் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சதீஷ். இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்தநிலையில் இன்று காலை வழக்கம் போல் பணிக்கு செல்வதற்காக மின்சார ஸ்கூட்டரை ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஸ்கூட்டரின் சீட்டின் கீழ் பகுதியில் இருந்து புகை கிளம்பியது.
இதனால் அதிர்ச்சியடைந்த சதீஷ், வாகனத்தை நிறுத்திவிட்டு சீட்டை திறந்து பார்த்தார். அப்போது தீ கொழுந்துவிட்டு எரிந்தவாறு கரும்புகை மளமளவென்று பரவியது.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தண்ணீர் எடுத்து வந்து தீயை அணைத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.