கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3-வது அணு உலையில் அழுத்தகலன் பொருத்தும் பணி
1 min readCompressor fitting work at the 3rd nuclear reactor of the Koodankulam Atomic Power Station
30.4.2022
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3-வது அணு உலையில் அழுத்தகலன் பொருத்தும் பணி நடந்தது.
கூடங்குளம்
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு நான்கு அணு உலை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்நிலையில் 3-வது அணு உலை அமையும் இடத்தில் அணு உலைக்கான இதயப் பகுதியான அழுத்த கலன் பொருத்தும் பணி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் இந்திய அணுசக்தி கழக இயக்குனர் சங்கரநாராயணன் முன்னிலையில் இந்திய அணுசக்தி கழக தலைவரும் நிர்வாக இயக்குனருமான புவன் சந்திர பதக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குனர் ஜெயகிருஷ்ணன், அணுமின் நிலைய வளாக இயக்குனர் ராஜீவ் மனோகர் காட்போலே, கூடங்குளம் அணுமின் நிலைய 3 மற்றும் 4-வது அணு உலைக்கான திட்ட இயக்குனர் சின்னவீரன், 5 மற்றும் 6-வது அணு உலைக்கான திட்ட இயக்குனர் எம்.எஸ்.சுரேஷ், நிலைய இயக்குனர் ஆர்.எஸ்.ஜவான் மற்றும் இந்திய, ரஷ்ய விஞ்ஞானிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.