June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 3,275 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 3,275 newcomers in India

5.5.2022
இந்தியாவில் இந்தியாவில் புதிதாக 3,275 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நேற்று முன்தினம் 3,000-க்கு (2,568) கீழே வந்தது. ஆனால் நேற்று மறுடிபயும் 3 ஆயிரத்தை கடந்தது. இதன்படி நேற்று 3,205 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று புதிதாக 3,275 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 ஆயிரத்து 275 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,91,393 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 55 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,23,975 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 3,010 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,25,47,699 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 19,719 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,89,63,30,362 பேருக்கு (இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13,98,710 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 4,23,430 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 83,93,79,007 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *