June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

அண்ணாமலை இயக்கத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை 13.5 லட்சத்தை கடந்தது

1 min read

Membership in the Annamalai Movement crosses 1.35 lakhs

6.6.2026
ஒருநாளில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து http://wetheleader.org இயக்கத்திற்கு நீங்கள் அளித்துள்ள பேராதரவு நெகிழ்ச்சியையும், பொறுப்பையும் எனக்கு அளித்திருக்கிறது என அண்ணாமலை தெரிவித்தார்.
பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் ராஜினாமாவை பாஜ தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது. புதிய பாதை, புதிய இயக்கம், புதிய பரிமாணத்தோடு, பார்வையோடு ஆரம்பிக்க வேண்டும் என்பது என் ஆசை. தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொதுத்தேர்தலில் நமது கட்சி போட்டியிடும்; அதில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்த அண்ணாமலை நேற்று (ஜூன் 05) இது நம்ம இயக்கம் (we the leaders) என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி இருக்கிறார்.


அண்ணாமலை தொடங்கியுள்ள இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை வேகமாக நடந்து வருகிறது. தற்போது 6.6.2026 அன்று மதியம் 2.30 மணி நிலவரப்படி 13 லட்சத்து 60 ஆயிரம் பேர் பதிவு செய்து இணைந்துள்ளனர்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து, http://wetheleader.org இயக்கத்திற்கு நீங்கள் அளித்துள்ள பேராதரவு, பெரும் நெகிழ்ச்சியையும், அதைவிட பெரிய பொறுப்பையும் எனக்கு அளித்திருக்கிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு தனி மனிதனின் பயணம் அல்ல; நல்ல மாற்றத்தை விரும்பும் நமது மக்களின் கூட்டுப் பயணம். மாற்றம் வேண்டும் என்று நம்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலும், நீங்கள் வழங்கியிருக்கும் பேராதரவில் எதிரொலிக்கிறது.
உங்கள் நம்பிக்கையை மதித்து, நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் இந்தப் பயணத்தை முன்னெடுப்போம். தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான இந்தப் பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.
இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *