தமிழகத்தில் இன்று 47 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 47 people in Tamil Nadu today
8.5.2022
தமிழகத்தில் நேற்று 89- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று பாதிப்பு 47 பேருக்கு தொற்று உறுதி
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை இன்று மாலை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
இன்று 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 54 ஆயிரத்து 353 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 68 ஆகும். கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லை.
தொற்று பாதிப்பைக் கண்டறிய ஒரு நாளில் 16 ஆயிரத்து 881 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இன்று 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.