June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி: பல்வேறு துறைகளின் வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் ஆய்வு

1 min read

Tenkasi: Collector reviews development works across various departments

9.6.2026
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை இன்று (09.06.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத்சிங், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடிக்குறிச்சி ஊராட்சியில் உள்ள மூலிகைத் தோட்ட வளாகத்தில் அமைக்கப் பட்டுள்ள நெகிழி கழிவு மையம், மண்புழு உரம் தயாரிக்கும் பணிகளையும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளி வீடு கட்டும் திட்டப்பணிகளையும், சிவராமப்பேட்டை கிராமத்தில் சாண எரிவாயு கலன் பயன்பாடுகள் குறித்தும், அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், எடை மற்றும் உயரம். கற்றல்திறன் குறித்தும், ஊர்ப்புற நூலகத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் வருகை குறித்தும், நயினாரகரம் ஊராட்சி வள்ளியம்மாள் புரத்தில் பேரி அர்பன் திட்டத்தின் கீழ் ரூ.847 இலட்சம் மதிப்பீட்டில் வாறுகால் அமைக்கப்பட்டுள்ள பணிகளையும், அருணகிரிபுரம் அங்கன்வாடி வடக்குத்தெருவில் பேரி அர்பன் திட்டத்தின் கீழ் 15.7.40 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ள பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, கடையநல்லூர் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.6.00 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் திட்டப்பணிகளையும், 15-வது நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.46 இலட்சம் மதிப்பீட்டில் நாய்கள் காப்பகம் அமைக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத்சிங், அறிவுறுத்தினார்.

பின்னர் கடையநல்லூர் வேளாண் விற்பனைக்கூட வளாகத்தில் உள்ள நெல்கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில், கடையநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர், உதவிப் பொறியாளர்கள் மார்க்கோனி, கௌவாசஹிரா ஆகியோர் உடனிருந்தனர். மற்றும் அரசு அலுவலர்கள்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *