மெயினருவியில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கை கோரிக்கை
1 min read
Request for permission to bathe in the Main Falls.
9.6.2026
குற்றாலம் மெயினருவியில் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்க கோரி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத்சிங்கிடம் குற்றாலம் பேரூராட்சி மன்ற தலைவர் எம்.கணேஷ் தாமோதரன் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார்.
குற்றாலம் பேரூராட்சி மன்ற தலைவரும், குற்றாலம் பேரூர் அதிமுக செயலாளருமான எம்.கணேஷ் தாமோதரன் தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார் அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சியானது உலகளவில் பிரசித்த பெற்ற புராதன காலம் முதல் சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ளது. குற்றாலத்தில் ஜுன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் முடிய சீசன் காலமாக கருதி, வெளி நாட்டினர். சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக வந்து செல்வார்கள்.
இந்நிலையில் தற்போது சீசன் ஆரம்பித்து 15 நாட்களாகியும் பேரருவியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதிக்காமல் உள்ளதால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
குற்றாலம் பேரருவியில் சுற்றுலாத்துறை மூலம் பணிகள் முடிவு பெறும் நிலையில், சீசன் ஆரம்பித்து பேரருவியில் நீர்வரத்து வந்த நிலையில், தற்போது பணிகள் மேற்கொள்வதற்கு சாத்தியமில்லை என்பதாலும் மற்றும் பேரருவி பகுதிகளில் சுமார் 70 கடைகள் பேரூராட்சி மூலம் குத்தகைக்கு விடப்பட்டு குத்தகைதாரர்கள் கடைகளை நடத்தி வருகிறார்கள். சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை பேரருவியில் குளிக்க அனுமதிக்காததால் கடைகளை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த குத்தகைதாரர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி பேரருவியில் பொதுமக்கள் குளிக்க அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்வதாக இவ்வாறு அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.