தமிழகத்தில் இன்று 35 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 35 people in Tamil Nadu today
23.5.2022
கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று குறைந்தது. இன்று 35 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. நேற்று தொற்று பாதிப்பு 43 ஆக பதிவான நிலையில் இன்று 35 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 35 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 19 பேர், செங்கல்பட்டில் 10 பேர் உள்பட 5 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. 33 மாவட்டங்களில் யாரும் புதிதாக பாதிக்கப்பட்டவில்லை. அரியலூர், கள்ளக்குறிச்சி உள்பட 13 மாவட்டங்கள் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகி உள்ளது. 67-வது நாளாக எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. தற்போது தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 183 பேரும், செங்கல்பட்டில் 57 பேரும் உள்பட 331 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.