June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

இளையராஜாவின் இசை ஒத்திகையை, கைத்தட்டி பாடல்களை ரசித்த ரஜினி

1 min read

Rajini enjoyed Ilayaraja’s music rehearsal and applause

24.5.2022-

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜாவின் ரிகர்சலில் கலந்துக் கொண்ட ரஜினி கைத்தட்டி பாடல்களை ரசித்துள்ளார்.

ரஜினியுடன் சந்திப்பு

சென்னை போயஸ்கார்டன் வீட்டில் ரஜினிகாந்தை, இளையராஜா இன்று காலை சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் மனம் விட்டு பேசினர். பின்னர் இளையராஜா விடைபெறும்போது, ‘சாமி ஏதாவது வேலை இருக்குதா’ என்று ரஜினிகாந்த் விசாரிக்க, “என் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 2ம் தேதி கோவையில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்காக ரிகர்சல் நடந்துகொண்டிருக்கிறது. அங்கே செல்கிறேன்’ என இளையராஜா கூறியுள்ளார்.

கைதட்டி மகிழ்ச்சி

“அப்படியா.. நானும் அங்கே வருகிறேன்” என்று ஆர்வமான ரஜினிகாந்த், தனது காரிலேயே இளையராஜாவை அழைத்து சென்றார். ஸ்டூடியோவில் அந்த நிகழ்ச்சி தொடர்பான ரிகர்சல் பணிகளையும், சில பாடல்களையும் ஆர்வமாக ரசித்து கேட்டார் ரஜினிகாந்த். இரண்டு மூன்று பாடல்களுக்கு கைதட்டி தனது மகிழ்ச்சியை தெரிவித்த ரஜினிகாந்த், பின்னர், இளையராஜாவிடம் இருந்து விடைபெற்றார். இவர்களின் இந்த சந்திப்பு சினிமா வட்டாரத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *