May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்தது

1 min read

Daily corona exposure in India is slightly lower

30.5.2022

இந்தியாவில் நேற்றுடன் ஒப்பிடும்போது இன்றைய கொரோனா பாதிப்பு சற்று குறைவாக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-

இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 706 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 2 ஆயிரத்து 828-ஐ விட குறைவாகும். இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 55 ஆயிரத்து 749 ஆக அதிகரித்துள்ளது. இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2 ஆயிரத்து 70 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 13 ஆயிரத்து 440 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 17 ஆயிரத்து 698 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தாக்குதலுக்கு ஒரு நாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 611 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 193 கோடியே 31 லட்சத்து 57 ஆயிரத்து 352 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.