June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

1 min read

2 terrorists shot dead in Jammu and Kashmir

11.6.2022
ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பயங்கரவாதிகள்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் கந்திப்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். அங்கிருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகளை பறிமுதல் செய்தனர். இதேபோல், புல்வாமா மாவட்டம் டிராப்காம் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *