மத்திய பிரதேசத்தில் தாய், மனை, 2 பிள்ளைகளை கொன்று வாலிபர் தற்கொலை
1 min read
Man kills his mother, wife, and 2 children, then dies by suicide in Madhya Pradesh
3.11.2026
மத்தியபிரதேசத்தில் ஒரே வீட்டில் 4 பேரை கொன்று வாலிபர் தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தியபிரதேச மாநிலம் போபால் அருகே உள்ள மாலிகேடியை சேர்ந்தவர் நரேந்திர சாஹு (வயது 35). இவர் தனது தாயார் சரஸ்வதி(50), மனைவி சோமலதா(29), மகள் கீர்த்தி(10) மற்றும் மகன் குஷ்(6) ஆகிய 4 பேரையும் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்தார்.
பின்னர் அவர் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்துக்கு சென்று ஓடும் ரெயில் முன்பு குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.