June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

மேகதாது அணை திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க கூடாது- பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்

1 min read

Megha Dadu Dam project report should not be discussed – Tamil Nadu Chief Minister’s letter to the Prime Minister

13.5.2022
மேகதாது அணை திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க கூடாது என்று பிரதமருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையம்

டெல்லியில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து விவாதிக்கப்படும் என்று ஆணையத் தலைவர் அறிவித்துள்ளார். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தமிழக அரசின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் ஆணைய தலைவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். இதற்கு தமிழகத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதி உள்ளார். அதில், காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்த்து தமிழ்நாடு அரசால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது என்றும், இதுதொடர்பாக உரிய அறிவுரைகளை ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்திற்கு வழங்க வேண்டும் என்றும், முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *