May 26, 2024

Seithi Saral

Tamil News Channel

இரண்டாம் உலகப் போரின்போது மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்க கப்பல் கண்டுபிடிப்பு

1 min read

Discovery of an American shipwreck during World War II

25.6.2022
இரண்டாம் உலகப் போரின்போது மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்க கடற்படையின் கப்பல் பிலிப்பைன்ஸில் கண்டுபிடிக்கப்பட்டது.

கடற்படை கப்பல்

இரண்டாம் உலகப் போரின்போது மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்க கடற்படையின் கப்பல் பிலிப்பைன்ஸில் கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 7,000 மீட்டர் (23,000 அடி) கீழே கண்டுபிடிக்கப்பட்டது. இது உலகின் மிக ஆழமான கப்பல் விபத்து ஆகும். அக்டோபர் 25, 1944 அன்று மத்திய சமர் தீவில் நடந்த போரின் போது அமெரிக்க கடற்படையின் கப்பல் சேதமடைந்தது. இந்த நிலையில், இந்த கப்பல் மூழ்கிய இடம் குறித்த துப்புகளை அடிப்படையாக கொண்டு, கடலுக்கடியில் நீர்மூழ்கிக் கப்பலில் தேடும் பணியில் ஈடுபட்ட குழு ஒன்று இந்த மூழ்கிய கப்பலின் பாகங்களை கண்டுபிடித்துள்ளது.
அமெரிக்க கடற்படை பதிவுகளின்படி, போரில் மூழ்கிய சம்மி-பி என்ற பெயரிடப்பட்ட இந்த போர் கப்பலில் இருந்த குழுவினர், கிட்டத்தட்ட மூன்று நாட்கள் கடலில் தத்தளித்தபடி காத்திருந்தனர். ஆனால், அந்த கப்பலில் மொத்தமுள்ள 224 பேரில், 89 பேர் பலியாகினர். அன்றைய காலகட்டத்தில், மூழ்கிய நான்கு அமெரிக்க கப்பல்களில் சம்மி-பி கப்பலும் ஒன்று. இதற்கு முன்னர் உலகின் மிக ஆழமான கப்பல் விபத்து என அடையாளம் காணப்பட்டது, கிட்டத்தட்ட 6,500 மீட்டர் கடல் ஆழத்தில், 2021இல் கண்டுபிடிக்கப்பட்ட யுஎஸ்எஸ் ஜான்ஸ்டன் என்ற கப்பல் ஆகும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.