May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கிராம்பு

1 min read

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கிராம்பு .

Clove boosts immunity

இரவில் கிராம்பை உட்கொள்வது இருமல், சளி, வைரஸ் தொற்று, மூச்சுக்குழாய் அழற்சி, சைனஸ் மற்றும் ஆஸ்துமா போன்றவற்றிலிருந்து விடுபட கிராம்பு உதவும்.

உடலில் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வீட்டிலேயே கிடைக்கும் பல இயற்கை மூலிகை பொருட்களை எடுத்துக்கொள்வது அவசியம். அந்த வகையில் கிராம்பு உங்கள் உடலில் இம்முனிட்டியை அதிகரிக்க பயன்படுகிறது. அனைத்து இந்திய சமயலறைகளிலும் கிராம்பு என்பது பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு வகை இந்திய மசாலா பொருள் ஆகும்.

இது ஒரு உணவின் சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதன் ஊட்டச்சத்து மதிப்பையும் அதிகரிக்கிறது. விஞ்ஞான ரீதியாக கிராம்பு சைஜீஜியம் அமோடிகம் என அழைக்கப்படுகிறது. இதுதவிர கிராம்பு ஆயுர்வேதத்தில் அவற்றின் மருத்துவ பண்புகளுக்காக பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கிராம்பினை தவறாமல் பயன்படுத்தும் போது, அவை வயிற்று வியாதிகளிலிருந்தும் பல் மற்றும் தொண்டை வலியிலிருந்தும் நிவாரணம் அளிக்க உதவும்.

கிராம்பில் உள்ள யூஜெனோல் என்ற பொருள் தான் மன அழுத்தம் மற்றும் பொதுவான வயிற்று நோய்களைப் போக்க உதவுகிறது. இதுதவிர இந்த சிறிய மசாலா பொருள் பார்கின்சன் நோயைத் தடுக்க உதவும் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் டோபமைன் (Dopamine) ஹார்மோன் சுரப்பு குறைவதால் ஏற்படும் பாதிப்புதான் பார்கின்சன். நரம்பு மண்டலத்தின் மிக முக்கியமான பாதிப்பான இது, தசை இயக்கத்தை பாதிக்கக்கூடியது. மூட்டுகள், தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் உள்ள தசைகளின் செயல்பாடுகள் முற்றிலுமாக குறைந்துவிடும்.

பொதுவாக இந்த நோய் வயதானர்களிடையே காணப்படும். அதுவே நீங்கள் அன்றாடம் கிராம்பு எடுத்துக்கொண்டால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். கிராம்பில், வைட்டமின் ஈ, வைட்டமின் சி, ஃபோலேட், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஏ, தியாமின், வைட்டமின் டி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இந்த மருத்துவக்குணம் கொண்ட மூலிகையை உணவில் சேர்க்க பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் இந்த ஒரு வழிமுறையை கடைப்பித்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளோ ஏராளம். அவை என்ன என்பதை பற்றி விரிவாக பாப்போம்.

கிராம்புகளை உட்கொள்வதற்கான சிறந்த வழி :

படுக்கைக்குச் செல்வதற்கு முன் இரண்டு கிராம்புகளை மென்று சாப்பிட்டு பின்னர் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு பின்வரும் சிக்கல்களிலிருந்தும் விடுபடலாம்.

  1. இரவில் கிராம்பை உட்கொள்வது மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அமிலத்தன்மை போன்ற வயிற்றுப் பிரச்சினைகளை போக்க உதவும். இது உங்கள் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.
  2. கிராம்பில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பது மட்டுமல்லாமல் இவை பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளன. மேலும், இதில் முகப்பருவைத் தடுக்க உதவும் ஒரு வகை சாலிசிலேட் உள்ளது.
  3. கிராம்புகளை வெதுவெதுப்பான நீரில் உட்கொள்வதன் மூலம் பல்வலியை தவிர்க்கலாம். அல்லது பல் வலியிருக்கும் இடத்தில் ஒரு கிராம்பை வைக்கலாம். இது வலி நிவாரணியாகவும் செயல்படும்.
  4. தொண்டை புண் மற்றும் தொண்டை வலியைப் போக்க கிராம்பு உதவும்.
  5. கை, கால்கள் நடுங்கும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் படுக்கைக்கு செல்லும் முன் 1 முதல் 2 கிராம்புகளை உட்கொள்ளவதன் மூலம் பிரச்சினையிலிருந்து நிவாரணம் பெறலாம்.
  6. தினமும் கிராம்பை உட்கொள்வது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  7. இருமல், சளி, வைரஸ் தொற்று, மூச்சுக்குழாய் அழற்சி, சைனஸ் மற்றும் ஆஸ்துமா போன்றவற்றிலிருந்து விடுபட கிராம்பு உதவும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.