May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 11,739 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 11,739 newcomers in India

26/6/2022
இந்தியாவில் ஒரே நாளில் 11 ஆயிரத்து 739 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்து 739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாள் பாதிப்பான 15 ஆயிரத்து 940ஐ விட குறைவாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 33 லட்சத்து 89 ஆயிரத்து 973 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 10 ஆயிரத்து 917 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 72 ஆயிரத்து 398 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 92 ஆயிரத்து 576 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

25 பேர் சாவு

கொரோனா தாக்குதலுக்கு ஒரு நாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 999 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 197 கோடியே 08 லட்சத்து 51 ஆயிரத்து 580 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.