April 26, 2024

Seithi Saral

Tamil News Channel

மராட்டியத்தின் அடுத்த முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ்?

1 min read

Devendra Patnaik is the next Prime Minister of Marathaland?

30.6.2022
உத்தவ் தாக்கரே பதவி விலகியதை தொடர்ந்து மராட்டியத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டு உள்ளது. முதல் மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் வரலாம் என்று கூறப்படுகிறது.

உத்தவ்தாக்கரே

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் சிவசேனா மூத்த தலைவரும், மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அவர்கள் அசாம் தலைநகர் கவுகாத்தியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தங்கி இருந்து நெருக்கடி அளித்து வந்தனர். மொத்தம் உள்ள 56 சிவசேனா எம்.எல்.ஏ.க்களில் 39 பேர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் சென்றதால் உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை இழந்து ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது.

இதற்கிடையில், மராட்டிய முதல் மந்திரியாக இருந்த உத்தவ் தாக்கரே, சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை உருவானது. இதனால் அவர் தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே இரவு 11.44 மணியளவில் கவர்னர் மாளிகை சென்று கோஷியாரிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். ராஜினாமா கடிதத்தை பெற்றுக்கொண்ட கவர்னர் புதிய அரசு அமையும் வரை காபந்து முதல்-மந்திரியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பாஜக ஆட்சி

உத்தவ் தாக்கரே பதவி விலகியதை தொடர்ந்து மராட்டியத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டு உள்ளது. அந்த கட்சிக்கு 106 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். 39 சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 11 சுயேட்சை உறுப்பினர்கள் ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சி அமைக்கிறது. முதல் மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பார் என்று தகவல்கள் கூறுகின்றன.
சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்னாத் ஷிண்டே துணை முதல் மந்திரியாக பதவியேற்கக் கூடும் என்றும் மராட்டிய அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. முதல் மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் நாளை பதவியேற்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.