July 30, 2026

Seithi Saral

Tamil News Channel

வெய்கை முத்து எழுதிய மக்களுக்காகவே மன்னர்கள் புத்தகம் வெளியீட்டு விழா

1 min read

The launch of the book “Mannars for the people” written by Veigai Muthu

5.7.2022
வெய்கை முத்து எழுதிய மக்களுக்காகவே மன்னர்கள் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

புத்தகம் வெளியீடு

தென்காசி மாவட்டம் கடையம் அருகே வெய்க்காலிபட்டியை சேர்நதவர் முத்து. ஓய்வு பெற்ற தமிழாசிரியராக இவர் வெய்கை முத்து என்ற பெயரில் புத்தகங்கள் எழுதி வருகிறார். இவர் எழுதிய மக்களுக்காகவே மன்னர்கள் என்ற புத்தகத்தை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இதன் வெளியீட்டு விழா கடையம் சத்திரம் பாரதி மகளிர் உயர்நிலைப்பள்ளியி்ல் நடந்தது.
கடையம் திருவள்ளுவர் கழக செயலாளரும் ஓய்வு பெற்ற தலைமை ஆசரியருமான கே.எஸ்.கல்யாணி சிவகாமி நாதன் முன்னிலை வகித்தார். சோகோ நிறுவனர் ஸ்ரீதர்வேம்பு புத்தகத்தை வெளியிட்டார். அதனை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வெங்கடரமணா, சத்திரம் பாரதி பெண்கள் உயர்நிலைப்பள்ளி தாளாளர் கே.எஸ்.அனந்தராமசேஷன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பேராசிரியர் சவுந்தர மகாதேவன் புத்தகத்தை பற்றிய விளக்க உரையாற்றினார்.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

நிகழ்ச்சிகளை வெய்கை முத்துவின் மகனும் நீதிபதியுமான சிவாஜி செல்லையா தொகுத்து வழங்கினார். விழாவில் பங்கேற்றர்கள் அனைவருக்கும் இரவு உணவு பரிமாரப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *