June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க நிர்மலா சீதாராமன் வேற்று கிரகத்தை நாடுகிறார்-ப.சிதம்பரம் கிண்டல்

1 min read

Nirmala Sitharaman seeks extraterrestrials to revive Indian economy-P Chidambaram teases

14.7.2022
இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேற்று கிரகத்தை ஒன்றிய மந்திரி நிாமலா சீதாராமன் நாடுவதாக ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.
பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை பிரச்சினைகளை விடுத்து மத்திய நிதியமைச்சர் நாசா புகைப்படங்களை பகிர்ந்து வியப்பு அடைந்து கொண்டிருப்பதாக விமர்சித்துள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தலைமைப் பொருளாதார ஜோதிடரை வேண்டுமானால் நியமிக்கலாம்’ என கேலியாக பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக சிதம்பரம் தனது டுட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது;

பணவீக்கம் 7.01 சதவீதமாக உள்ளது, வேலைவாய்ப்பின்மை 7.8 சதவீதமாக உள்ளது. ஆனால் நிர்மலா சீதாராமனோ ஜூபிடர், ப்ளூட்டோ படங்களை பகிர்ந்துள்ளார். இதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. அவர் தன் மீதும், தனது அமைச்சகத்தின் மீதும், பொருளாதார வல்லுநர்கள் மீதும் நம்பிக்கையை இழந்துவிட்டார். அவர் இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேற்று கிரகத்தை நாடுவது போல தெரிகிறது. இதற்காக அவர் முதலில் பொருளாதாரம் தெரிந்த ஜோதிடரை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *