June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

நீரவ் மோடியின் ரூ.250 கோடி சொத்துக்கள் முடக்கம்

1 min read

Nirav Modi’s Rs 250 crore assets frozen

22.7.2022
நீரவ் மோடி பதுக்கி வைத்திருந்த ரூ.253.62 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று அதிரடியாக முடக்கியுள்ளது.

நிரவ் மோடி

குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நே‌‌ஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்து, சி.பி.ஐ. நெருக்கடி முற்றியதும் வெளிநாட்டுக்கு தப்பியோடினார். லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். தற்போது இங்கிலாந்து சிறையில் இருக்கும் நீரவ் மோடியை நாடு கடத்தி இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நிரவ் மோடி ஹாங்காங்கில் போலி நிறுவனத்தின் பேரில் தங்கம், வைரம் மற்றும் விலையுர்ந்த ஆபரணங்கள் மற்றும் வங்கி டெபாசிட் என பதுக்கி வைத்திருந்த ரூ.253.62 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று அதிரடியாக முடக்கியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *