தமிழகத்தில் இன்று 2,033 பேருக்கு கொரோனா
1 min read
2,033 people in Tamil Nadu have corona today
22.7.2022
தமிழகத்தில் இன்று 2 ஆயிரத்து 033 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று 2 ஆயிரத்து 033 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 16,504ல் இருந்து 16,153 ஆக குறைந்தது. ஒரே நாளில் 2,383 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
ஒருவர் சாவு
கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில் இறப்பு எண்ணிக்கை 38,032 ஆக உள்ளது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,093 இல் இருந்து 2,033 ஆக குறைந்துள்ளது. சென்னையில் ஒருநாள் கொரோனா தொற்று பாதிப்பு 516 இல் இருந்து 466 ஆக குறைந்தது. செங்கல்பட்டு – 217, கோவை -187, திருவள்ளூர் -93, காஞ்சிபுரம் -68, விருதுநகர் -66, ஈரோடு -60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.