தமிழகத்தில் மேலும் 1,803 பேருக்கு கொரோனா
1 min read
1,803 more people in Tamil Nadu have corona virus
27.7.2022
தமிழகத்தில் இன்று கொரோனாவால் புதிதாக 1,803 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் புதிதாக 1,079 ஆண்கள், 724 பெண்கள் என மொத்தம் 1,803 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 396 பேர், செங்கல்பட்டில் 191 பேர், கோவையில் 169 பேர் உள்பட அனைத்து மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. இதில் 7 மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு 10-க்கும் கீழ் குறைவாக உள்ளது. மேலும், 12 வயதுக்குட்பட்ட 81 குழந்தைகளுக்கும் , 60 வயதுக்கு மேற்பட்ட 254 முதியவர்களுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் 669 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. கொரோனா பாதிப்புக்குள்ளாகி 14 ஆயிரத்து 284 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 4 ஆயிரத்து 589 பேரும், செங்கல்பட்டில் 1,502 பேரும் சிகிச்சையில் இருக்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.