தமிழகத்தில் இன்று 1,548 பேருக்கு கொரோனா
1 min read1,548 people have corona in Tamil Nadu today
30.7.2022
தமிழகத்தில் இன்று 1,548 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;- தமிழகத்தில் இன்று 1,548 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு இதுவரை உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 42 ஆயிரத்து 779 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,964 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லை. கொரோனா தொற்று பரவலைக் கண்டறிய 31 ஆயிரத்து 457- மாதிரிகள் இன்று பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் மேலும் 345 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.