June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

என்.டி.ராமராவ் மகள் தூக்குப்போட்டு தற்கொலை

1 min read

NT Rama Rao’s daughter committed suicide by hanging

1.8.2022
ஆந்திர முன்னாள் முதல் மந்திரி என்.டி.ராமராவ் மகள் உமா மகேஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

என்.டி.ஆர். மகள்

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி என்.டி.ராமராவ். இவர் சினிமாவில் அதிகமாக கிருஷ்ணர் வேடம் ஏற்று நடித்ததால் ரசிகர்கள் அவரை தெய்வமாகவே போற்றினர்.
அவரது மகள் உமா மகேஸ்வரி.
இவர் ஐதராபாத்தில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ]
தகவல் கிடைத்தும் போலீசார் விரைந்து சென்ற உமா மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்த உமாமகேஸ்வரி என்.டி.ஆரின் 12வது மகள் ஆவார். இவர் ஏற்கனவே உடல் ரீதியாக பல பிரச்சினைகளில் இருந்து வந்ததாகவும், இந்த நிலையில்தான தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகறிது.
உமா மகேஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. என்.டி.ஆர் மகளின் திடீர் தற்கொலை முடிவு தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *