June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

சென்னை கடலில் குளித்து கொண்டிருந்த 4 பேர் அலையில் சிக்கி மாயம்

1 min read

4 people who were bathing in the Chennai sea got caught in the wave

14.8.2022
திருவொற்றியூரில் கடலில் குளித்து கொண்டிருந்த போது ராட்சத அலையில் சிக்கி மாயமான 4 பேரை தேடி வருகின்றனர்.

அலையில் சிக்கினர்

சென்னை கொருக்குப்பேட்டை அம்பேத்கார் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கரீம் மொய்தீன். இவரது குடும்பத்தினர் 9 பேர் ஒரு ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களில் இன்று காலை 9 மணிக்கு திருவொற்றியூர் பலகை தொட்டி குப்பம் அருகே கடலில் குளிக்க வந்தனர். இந்நிலையில் 9 பேரும் கடலில் குளித்து விளையாடி கொண்டிருந்தபோது திடீரென்று கடலில் தோன்றிய ராட்சத அலை கபீர் (வயது 24) அமரின் (18) ஆபான் (14) அவர்களது நண்பர் சபரி (16) ஆகிய 4 பேரை கடலுக்குள் இழுத்துச் சென்றது. உடனே அருகில் குளித்துக் கொண்டு இருந்த உறவினர்கள் அவர்களை காப்பாற்றுமாறு கூச்சலிட்டினர். உடனே அருகில் உள்ள மீனவர்கள் கடலுக்குள் இறங்கி தேடி வருகின்றனர்.
தகவல் அறிந்ததும் திருவொற்றியூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினரும் கடலில் காணாமல் போன நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *