August 2, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 759 பேருக்கு கொரோனா

1 min read

Today 759 people have Corona in Tamil Nadu

14.8.2022
தமிழகத்தில் கொரோனா தொற்று ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து இன்று ஒரே நாளில் 759 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்வில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 25,519 பேருக்கு பரிசோதனை நடைபெற்றது. இதில் 759 பேருக்கு தொற்று உறுதியானது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,58,788 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,033 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,13,349 ஆக உயர்ந்து உள்ளது. இன்று ( ஆக.,14) கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லை. இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 38,033 ஆக உள்ளது.
சென்னையில் தொற்று பாதிப்பு குறைவாக காணப்பட்டது. நேற்று (ஆகஸ்ட்13ம் தேதி ) 147 ஆக இருந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 14 ம் தேதி) சென்னையில் 138 ஆக குறைந்து உள்ளது. தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 7,406 ஆக உள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *