May 9, 2024

Seithi Saral

Tamil News Channel

சந்திரதிரிகோண மலையில் பூத்துகுலுங்கும் குறிஞ்சி மலர்கள்

1 min read

Kurunji flowers blooming on Chandratrikon Hill

29.8.2022
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூக்கள் சிக்கமகளூரு சந்திரதிரிகோண மலைப்பகுதியில் பூத்து குலுங்கியுள்ளது. இதனை காண சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

குறிஞ்சி மலர்

குறிஞ்சி பூ சிக்கமகளூருவில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சந்திரதிரிகோண மலை. இந்த மலைப்பகுதியில் அதிகப்படியான காபி தோட்டங்கள், இயற்கை எழில் கொஞ்சும் அழகும் நிறைந்து காணப்படுகிறது. பாபாபுடன் கிரி, முல்லையன் கிரி, மாணிக்கதாரா, ஒன்னம்மன் அருவிகள் இங்கு உள்ளது. இந்த நிலையில் சந்திர திரிகோண மலைப்பகுதியில் நீல வண்ண நிறத்திலான குறிஞ்சி பூக்கள் பூத்து குலுங்கியுள்ளது. இந்த குறிஞ்சி பூக்கள் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பூக்கும். குவியும் சுற்றுலா பயணிகள் இதையறிந்த சுற்றுலா பயணிகள், சந்திர திரிகோண மலைக்கு படையெடுத்து வந்து குறிஞ்சி பூக்களை கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும் குடும்பமாக நின்று தங்கள் செல்போன்களில் படம் எடுத்து மகிழ்கின்றனர். இந்த பூக்கள் 15 நாட்கள் மட்டுமே பூக்கும் என்பதால் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு செல்வதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மூடிகெரே தாலுகா தேவரமனே மலைப்பகுதியில் குறிஞ்சி பூக்கள் பூத்தது. இந்தாண்டு சந்திரதிரிகோண மலைப்பகுதியில் பூத்து குலுங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.