May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

விரைவில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

1 min read

Rs 1,000 per month will be given to women soon – Chief Minister M K Stalin assured

1.9.2022
விரைவில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மு.க.ஸ்டாலின்

கோவை கொடிசியா வளாகத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி இல்ல திருமண விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்கள் ஸ்ரீநிதி – கெளசிக் தேவ் ஆகியோருக்கு மாலை எடுத்து கொடுத்து திருமணம் நடத்தி வைத்து வாழ்த்தினார். பின்னர் திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று பொய்யான குற்றச்சாட்டை கூறுகிறார் எடப்பாடி பழனிசாமி. திமுக ஆட்சி அரசியல் ஆட்சி கிடையாது. இபிஎஸ் தொகுதியாக இருந்தாலும் மக்கள் பிரச்சினையை நாங்கள் தீர்த்து வைக்கிறோம். 70 சதவீதம வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம், எஞ்சிய 30 சதவீத வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவோம்.
மாதம் ரூ.1000

மக்கள் என்னிடம் மனு கொடுத்துவிட்டு நன்றி என்று சொல்கின்றனர். மனு மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பே அவர்களுக்கு அந்த நம்பிக்கையை கொடுத்துள்ளோம். இது தான் திராவிட மாடல் ஆட்சி. நிதிப்பிரச்சினையை சீரமைத்த பின் மகளிருக்கான உரிமைத்தொகை மாதம் ரூ 1000 விரைவில் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.