June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்

1 min read

Union Finance Minister Nirmala Sitharaman’s darshan at Goddess Kamachi temple in Kanchi

10.9.2022
காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.
நிர்மலா சீதாராமன்

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம் செய்தார். கோவிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் அவர் கலந்துகொண்டார். இதையடுத்து மத்திய நிதி மந்திரிக்கு கோவில் நிர்வாகத்தில் சார்பில் பாதாம், முந்திரி, ஏலக்காய், மாலை மற்றும் கோவில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மத்திய நிதி மந்திரி கோவிலுக்கு வருவதையொட்டி இரண்டு மணி நேரத்துக்கு பொதுமக்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

==
இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்: ரெயில் எஞ்சின் மீது ஏறியவர் மின்சாரம் தாக்கி படுகாயம்…! தினத்தந்தி Sep 11, 12:44 pm Text Size தியாகி இம்மானுவேல் சேகரன் 65-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் 65-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தில் பங்கேற்க வந்த இளைஞர் ஒருவர் ரெயில் எஞ்சின் மீது ஏறி கொடியசைத்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்துள்ளார். படுகாயம் அடைந்த இளைஞரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மருத்துவர்கள் இளைஞரை பரிசோதித்து மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *