August 2, 2026

Seithi Saral

Tamil News Channel

சபரிமலை பயணத்தை தவிர்க்க அறிவுறுத்தல்

1 min read

Advice to avoid the Sabarimala pilgrimage.

2.8.2026
சபரிமலையில் நிறைப் புத்தரிசி பூஜைக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடை திறக்கப்பட்டது. இந்தநிலையில் பம்பை ஆற்றில் வெள்ளப்பெ ருக்கு ஏற்பட்டுள்ளதால் தரிசனத்துக்கு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் நிறைப்புத்தரிசி பூஜை நாளை (திங்கட் கிழமை) நடக்கிறது.

இதுகுறித்து தேவஸ்தானம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பம்பை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஆற்றை கடக்க முடி யாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே நாளையும் நாளை மறுநாளும் சாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்துள்ள பக்தர்கள் தங்களது சபரிமலை பய ணத்தை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை வருகிற 16-ந் தேதி திறக்கப்படும். 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை நடைபெறும். மேலும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகிற 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை கோவில் நடை திறக்கப் படும். இதற்கான தரிசன ஆன்லைன் முன்பதிவு தற்போது நடந்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *