May 30, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., விசிக பேரணிக்கு அனுமதி மறுப்பு

1 min read

Denial of permission for RSS, Vishika rally in Tamil Nadu

தமிழகம் முழுவதும் அக்.2-ந் தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம், விசிக – வின் மனித சங்கிலிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ். பேரணி

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் அக். 2-ந் தேதி நடக்க உள்ள ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சட்டம் – ஒழுங்கு பிரச்சினை காரணமாக ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 2-ம் தேதி சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடத்தப்போவதாக திருமாவளவன் அறிவித்திருந்தார். அக்டோபர் 2-ம் தேதி வேறு சில அமைப்புகளும் தமிழகம் தழுவிய சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடத்த அனுமதி கோரியதால் சட்டம் ஒழுங்கு கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 2-ல் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 50 இடங்களில் அக்டோபர் 2-ம் தேதி ஆர் எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.