August 27, 2026

Seithi Saral

Tamil News Channel

உத்தர்காசி பனிச்சரிவில் சிக்கிய 29 பேரை மீட்க நிபுணர்குழு

1 min read

Expert team to rescue 29 people trapped in Uttarkashi avalanche

6.10.2022
உத்தர்காசி பனிச்சரிவில் சிக்கியுள்ள 29 பேரை மீட்க நிபுணர் குழு விரைந்துள்ளது.

பனிச்சரிவு

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் நேரு மலையேறுதல் நிறுவனம் என்ற அரசு மலையேறுதல் கல்வி பயிற்சி நிறுவனம் உள்ளது. இந்த பயிற்சி நிறுவனத்தை 34 பயிற்சி மலையேறு வீரர்கள் மற்றும் 7 பயிற்சியாளர்கள் என மொத்தம் 41 உத்தர்காசியில் உள்ள இமயமலையின் திரவுபதி கா கண்டா – 2 சிகரத்தில் இருந்து பயிற்சியை முடித்துக்கொண்டு முகாமிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, மலைச்சிகரத்தின் 16 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து முகாமிற்கு திரும்பிக்கொண்டிருந்தபோது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நிகழ்ந்த இந்த பனிச்சரிவில் மலையேற்ற வீரர்கள் அனைவரும் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்த இந்தோ-தீபெத் எல்லைப்பாதுகாப்பு படையினர், தேசிய, மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்டும் பணியில் களமிறங்கினர். மீட்பு பணியின் போது பனிச்சரிவில் சிக்கிய பலர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

29 பேர்

ஆனால், இந்த பனிச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 29 பேர் இன்னும் பனிச்சரிவில் சிக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பனிச்சரிவில் சிக்கிய எஞ்சியோரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டு மீட்புப்பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.
இந்நிலையில் உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகளுக்கு உதவ குல்மார்க்கிலிருந்து நிபுணர் குழு விரைந்துள்ளது. இத்ற்கிடையே, வானிலை ஆய்வு மையத்தின் மழை மற்றும் பனி எச்சரிக்கை காரணமாக, உத்தரகாசி மாவட்டத்தில் மலையேற்றம் மற்றும் மலையேறுதல் நடவடிக்கைகள் அடுத்த மூன்று நாட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *