August 27, 2026

Seithi Saral

Tamil News Channel

40 ஆண்டுகள் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றிய ஆயுள் தண்டனை கைதி

1 min read

A life-term convict who served as a government school teacher for 40 years has also received the ‘Best Teacher’ award.

29.8.2026
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் பரோலில் வெளியே வந்து, சுமார் 40 ஆண்டுகள் காவல்துறையின் கண்ணில் படாமல் சுதந்திரமாக வாழ்ந்துள்ள விசித்திர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டத்தில் தண்டலபல்லி மண்டலம் பெத்தமுப்பாரம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தெல வீரன்னா.

இவருக்கு 1983இல் வாரங்கல் நீதிமன்றம் வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதித்தது.

அதே ஆண்டு டிசம்பரில் பரோலில் வெளிவந்த அவர் அதன்பின் தலைமறைவானார்.

அதன் பின் இவ்வளவு காலமும் மஹபூபாபாத் மாவட்டத்திலேயே அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி, சிறந்த ஆசிரியர் விருதையும் பெற்று, பணி ஓய்வும் பெற்றுள்ளார்.

சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு மே 16 அன்று வாரங்கல் மத்திய சிறை சிறப்பு அதிரடிப் படை போலிசார் வீரன்னாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவருக்கு 3 ஆண்டுகளுக்குப் பரோல் மற்றும் தண்டனைக் குறைப்பு சலுகைகளை மறுத்து சிறைத்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து வீரன்னாவின் மனைவி சாரம்மா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதி டி. மாதவி தேவி அடங்கிய அமர்வு, குற்றவாளி வேண்டுமென்றே சட்டத்தின் பிடியில் இருந்து தப்பியோடி வாழ்ந்துள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டி மனுவைத் தள்ளுபடி செய்தது.

சிறைத்துறையின் அலட்சியப்போக்கிற்கு இந்தச் சம்பவம் ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

ரோலில் செல்லும் கைதிகளை கண்காணிக்க டிராக்கிங் சிஸ்டம் மற்றும் புதிய வழிகாட்டுதல்களை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று சிறைத்துறைக்கு உத்தரவிட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *