June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

ஸ்ரீவைகுண்டம் பா.ம.க நிர்வாகி மனைவி வெட்டிக் கொலை

1 min read

Wife of Srivaikundam PMC executive hacked to death

8.10.2022
ஸ்ரீவைகுண்டம் அருகே பா.ம.க நிர்வாகி மனைவி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

பாமக நிர்வாகி

ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் பா.ம.க ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளராக இருப்பவர் சுப்பிரமணியன். இவருடைய மனைவி பொன்னம்மாள் (வயது45).
இவரை அதே பகுதியை சேர்ந்த இசக்கி பாண்டி வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். பாமக ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளராக இருக்கிறார். இவரது மனைவி பொன்னம்மாள். (45) அதே பகுதியைச் சேர்ந்த மூக்கத்தேவர் மகன் இசக்கிபாண்டி குடிபோதையில் நேற்று நள்ளிரவில் பொன்னம்மாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த இசக்கிபாண்டியன், அவரது தந்தை மூக்கத்தேவர் மற்றும் தாய் பிச்சம்மாள் ஆகியோர் கட்டையால் பொன்னம்மாளை தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் இசக்கிபாண்டி பொன்னம்மாளை அரிவாளால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது. இதில் படுகாமடைந்த பொன்னம்மாளை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி மாயவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பொன்னம்மாள் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து கொலை வழக்காக பதிவு செய்து இசக்கிபாண்டி, மூக்கத்தேவர், பிச்சம்மாள் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *