நடிகை நயன்தாராவுக்கு இரட்டை ஆண்குழந்தை
1 min read
Actress Nayanthara has twin boys
9.10.2022
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று பட்டம் பெற்றிருப்பவர் நடிகை நயன்தாரா. வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்த அவர் பலமுறை தனிநபர் விமர்சனத்தையும் சந்தித்திருக்கிறார். ஆனால் அதற்கெல்லாம் அசராத நயன்தாரா தன் உழைப்பால் தற்போது நடிகைகளில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட்டிலும் நடித்துவருகிறார்.
அவர் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி இயக்குநர் விக்னேஷ் சிவனை சென்னையை அடுத்த மாமல்லபரத்தில் திருமணம் செய்துகொண்டார். கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த இத்திருமணத்தில் வரவேற்பு அழைப்பிதழ் வைத்திருந்த பிரபலங்கள் மட்டும் கலந்துகொண்டனர். திருமண நிகழ்வின் ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் வாங்கிவைத்திருந்ததன் காரணமாக திருமண அரங்குக்குள் செல்போனில் படம் பிடிக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோல பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
திருமணத்தை முடித்த கையோடு இருவரும் ஹனிமூன் சென்றுவிட்டு மீண்டும் தங்களது பணிகளில் மூழ்கியுள்ளனர்.
இந்த நிலையில் எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ; நயன்தாராவும் நானும் அம்மா , அப்பாவாகிவிட்டோம்.எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து, எங்களுக்கு ஆசீர்வதிக்கப்ட்ட இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் எங்களுக்காக வேண்டும்.என தெரிவித்துள்ளார். விக்னேஷ் சிவன் ,நயன்தார தம்பதிக்கு ரசிகர்கள் ,மற்றும் திரைத்துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
திருமணமாகி 4 மாதம் ஆன நிலையில் குழந்தை பிறந்ததை வலைதளத்தில் பலரும் விமரித்து வருகிறார்கள். ஆனாலும் அவர்கள் திருமணத்திற்கு முன்பே ஒரே குடும்பமாகத்தான் வாழ்ந்தார்என்பது அனைவருக்கும் தெரியும்.
நயன்தாரா தான் கர்ப்பமுற்றதை வெளியில் சொல்லவே இல்லை. எனவே அவர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றிருக்கலாம் என்றும் வலைதளத்தில் கூறியுள்ளனர்.000000000000000000000000000000000000000000000000000000000