June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

மதமாற்ற சர்ச்சையில் சிக்கிய டெல்லி மாநில அமைச்சர் ராஜினாமா

1 min read

Delhi state minister resigns amid conversion controversy

9,10,2022
மதமாற்ற சர்ச்சையில் சிக்கிய டெல்லி மாநில சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் பதவி விலகினார்.

டெல்லி அமைச்சர்

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், இந்து மதத்தை சேர்ந்த 10 ஆயிரம் பேர் புத்த மதத்திற்கு மாறினர். அப்போது, இந்து மதத்தை பின்பற்ற மாட்டோம். இந்து கடவுள்களுக்கு பூஜை செய்ய மாட்டோம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது. அவர்களுடன் டெல்லி அமைச்சர் ராஜேந்திர பால் கவுதமும் கலந்து கொண்டார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தின. முதல்வர் கெஜ்ரிவால், பிரசாரத்திற்கு குஜராத் சென்ற போது, எதிர்ப்பு கிளம்பியது. அக்கட்சி பேனர்கள் கிழிக்கப்பட்டன.

இச்சூழ்நிலையில் அமைச்சர் பதவியில் இருந்து ராஜேந்திர பால் கவுதம் ராஜினாமா செய்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *