May 26, 2024

Seithi Saral

Tamil News Channel

என் தோள்களின் மேல் ஒரு சுமை இருந்தது, தற்போது நிம்மதியாக உணர்கிறேன்-தலைவர் பொறுப்பை ஒப்படைத்துவிடடு சோனியாகாந்தி பேச்சு

1 min read

I had a burden on my shoulders and now I feel relieved-hand over the leadership Sonia Gandhi speech

26/10/2022
என் தோள்களின் மேல் ஒரு சுமை இருந்தது, தற்போது நிம்மதியாக உணர்கிறேன் என்று தலைவர் பொறுப்பை ஒப்படைத்துவிடடு சோனியாகாந்தி பேசினார்.

காங். தலைவர்

சுமார் 23 வருடங்களாக அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக இருந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். கட்சி தலைமை பொறுப்பை கார்கேவுக்கு மாற்றிக் கொடுக்கும் நிகழ்ச்சியில் சோனியா காந்தி பேசியதாவது:-

நிம்மதி

சோனியா காந்தி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மாற்றமே உலகின் விதி காங்கிரஸ் முன்பு நிறைய சிரமங்களைச் சந்தித்தது. ஆனால் பிரச்சினைகளை சமாளிப்போம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நான் மிகவும் நிம்மதியாக இன்று உணர்கிறேன் நான் ஏன் இவ்வாறு சொல்கிறேன் என்று விளக்குகிறேன். உங்களின் அன்பையும், நீங்கள் எனக்கு அளித்த மரியாதையும் நான் என்னுடைய கடைசி மூச்சு இருக்கும் வரை மதிப்பேன். ஆனால் அந்த மரியாதை மிகப்பெரிய பொறுப்பு வாய்ந்தது. என்னால் முடிந்த அளவுக்கு எனது பணியினை நான் சிறப்பாக செய்தேன். என் தோல்களின் மேல் ஒரு சுமை இருந்தது. அந்த பொறுப்புகளில் இருந்து இன்று நான் விடுபடுகிறேன். அதனால் இயல்பாகவே நான் நிம்மதியாக உணருகிறேன்.
காங்கிரஸ் கட்சியின் தலைமை என்பது மிகப் பெரிய பொறுப்பு. இனி இந்த பொறுப்பு மல்லிகார்ஜுன கார்கேவினுடையது. காங்கிரஸ் கட்சி பல சவால்களை சந்தித்துள்ளது. அந்தச் சவால்களை நாம் எவ்வாறு எதிர்கொண்டோம். முழு பலத்துடன் ஒற்றுமையாக நாம் முன்னேறி வெற்றி பெற்றோம். தற்போது நமது முன்னால் நாட்டின் ஜனநாயக மதிப்புகளுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் மிகப் பெரிய சவால் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.